Youth Challenge Award Chennai
CALLING ALL YOUNG LEADERS! OPEN OCTOBER 21st TO NOVEMBER 24th, 2019
A REQUEST FOR YOUR IDEAS ABOUT MAKING CHENNAI A BETTER PLACE FOR YOUNG PEOPLE!
See details in English and Tamil below.
citiesRISE is launching the Youth Challenge Award (YCA) in Chennai to support emerging young leaders and youth-focused organizations focused on improving mental health for and with young people in Chennai. We are looking for project submissions that are largely designed and implemented by youth (age 15-35) and that address one or more of these four areas:
- Removing stigma from the narrative around mental health so that it is valued
- Increasing access to care and support for everyone
- Building social connectedness
- Creating environments that support mental health and well-being
What’s the deal?
The youth leader(s) who receive the challenge award will work closely with the citiesRISE team to refine, implement, and evaluate the initiative. The award winner(s) will receive one year of funding ($2,000-$10,000) along with other capacity-building and networking support so that they can make their ideas a reality.
Beyond the Youth Challenge Award, citiesRISE has a growing network of young people passionate about transforming mental health in their community and globally. Every young person who applies is invited to join and support a youth network being established in Chennai and participate at national and global level activities that connects youth in participating cities from Colombia, Kenya, India, the United States, and additional countries in the future.
Who can apply?
Individuals, groups of young people, and/or organizations that support youth are welcome to apply. If you are an individual or a group without a formal organization and are selected as an awardee, we will work with you to identify an organization to support your project. We accept any and all questions during the open submission period. Please reach out to Brindaa Lakshmi at brindaa@cities-rise.org for support with submitting your application.
What type of ideas are we looking for?
Your submission should address one or more of the below areas:
- Removing stigma from the narrative around mental health so that it is valued
- Increasing access to care and support for everyone
- Building social connectedness
- Creating environments that support mental health and well-being
Learnings from our work in Chennai:
Based on the feedback from the convening of the landscape assessment and stakeholder engagements in Chennai, we have heard the following priorities and areas of interest:
- Young people need to be involved in the decision-making process and leadership, and have the right to decide on the options that they need and choose what works best for them, especially from young people with lived experience.
- There is a need to move away from the medical approach and explore a variety of solutions outside healthcare as well to tackle mental health issues, since it faces the danger of looking at mental health in isolation, without the effect of its intersectionality with caste, color, gender, sexuality, disability etc., and the influence of other sectors such as education, arts, urban design,media, etc.
- There is a need to approach mental health keeping in mind different diverse identities of individuals and their intersectionality such as Dalit groups, LGBTIQA+ community, persons with disabilities, among others.
How to apply?
STEP 1 – REVIEW THE ANNOUNCEMENT: Review this ENTIRE page carefully.
STEP 2 – COMPLETE THE BASIC INFORMATION: Fill out the cover sheet that is part of the submission guide.
STEP 3 – WRITE YOUR APPLICATION: Write a narrative that includes all the information requested below. Please use 11-point font or larger and single space your document.
TO WRITE YOUR APPLICATION, YOU WILL NEED TO ANSWER THE BELOW QUESTIONS:
Section 1. Who are you? (1 page maximum)
Please answer Section 1 EITHER as an individual / group OR an organization.
Individual/Group History – (if you do not have an organization or are applying without a host organization): Individual/group History – (if you do not have an organization)
- Name of individual, gender, and age
- Background (education/work experience/lived experience)
- What’s the purpose behind your idea?
- Describe what you are currently doing (studying, working, etc.).
- Provide information on any awards, successes and relevant impact statistics
OR
Organization History – (please include information on your organization here)
- Mission statement of organization
- Background of the team implementing the project
- What’s the purpose behind your idea?
- Describe your organization’s current programs and services
- Provide information on any awards, successes and relevant impact statistics
Section 2. What is your project/idea? (2 pages maximum)
- Describe the proposed project, including the stage (idea, proof of concept or implementation).
- What is the specific problem the proposed project addresses and focus area(s) (listed on page 2) the project/idea targets?
- Describe the target setting (e.g. schools, colleges, informal settlements) and the target population (e.g. specific marginalized communities, students, ) and how the project will benefit them.
- What are the core activities you envision for the project?
- What are some short-term and long-term outcomes for the project, and at which level (individual or community)?
- What is the amount of award money you are seeking and how will it be used to support the project?
Section 3. Why do you think this project will be successful? (1 page maximum)
- Describe why your approach is practical.
- Why is now the right time for this project (i.e. relevant policy, infrastructure)?
- What makes you believe the project will be effective [scale and impact] and can be implemented in the time proposed?
- How have you incorporated intersectionality in your project?
Section 4
- What is the most critical support you are looking for? (This question will not be evaluated and is meant for us to understand the kind of capacity building support the applicant will benefit most from and tailor partnerships accordingly.)
STEP 4 – SUBMIT AN APPLICATION: Submit your application by November 24, 2019 at 11:59 PM IST via email to YCAsubmissions@cities-rise.org prior to the deadline. Make sure to include “Chennai YCA” in the subject line of your email.
Please click on the below links to download the full Chennai Youth Challenge Award expression of interest overview and submission guide.
Download the full Chennai YCA Expression of Interest Request announcement
Download the Chennai YCA Submission Guide
Submission Deadline: November 24th, 2019 at 11:59 PM IST
Good luck – we look forward to receiving your submission!
இளையோர் சவால் விருது சென்னை
அனைத்து இளையோருக்கும் அழைப்பு !
2019 அக்டோபர் 21 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
இளவயது நபர்களுக்கு சென்னையை சிறப்பான அமைவிடமாக ஆக்குவது குறித்து உங்களது மேலான யோசனைகளையும், சிந்தனைகளையும் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்!
சென்னையில் இளவயது நபர்களின் மனநலனை மேம்படுத்துவது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கின்ற மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற இளம் தலைவர்கள் மற்றும் இளையோர் மீது சிறப்பு கவனம் செலுத்திவரும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்க ஒரு இளையோர் சவால் விருது (YCA) என்பதை சிட்டிஸ்ரைஸ் நிறுவியிருக்கிறது. இளவயது நபர்களால் (வயது 15-35) பெருமளவு வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டிருக்கிற மற்றும் கீழ்வரும் நான்கு பகுதிகளில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமானவற்றின் மீது கூர்நோக்கம் செலுத்தியிருக்கின்ற செயல்திட்ட (புராஜெக்ட்) சமர்ப்பிப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்:
- மனநலம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அதை சுற்றியுள்ள சித்தரிப்பில் இருக்கும் அவப்பெயரை அகற்றுவது
- அனைவருக்கும் சிகிச்சை கவனிப்பு மற்றும் ஆதரவிற்கான அணுகுவசதியை அதிகரிப்பது;
- சமுதாய இணைப்பு நிலையை கட்டமைப்பது; மற்றும்
- மனநலத்தை மற்றும் நலவாழ்வை ஆதரிக்கின்ற சூழல்களை உருவாக்குவது.
விருதின் மூலம் என்ன பலன் விளையும்?
இளையோர் சவால் விருதைப் பெறுகின்ற இளம் தலைவர்(கள்) அவர்களது முனைப்புத்திட்டத்தை இன்னும் நேர்த்தியாக, செயல்படுத்த மற்றும் மதிப்பீடு செய்ய சிட்டிஸ்ரைஸ் குழுவுடன் இணைந்து நெருக்கமாக செயலாற்றுவார்கள். விருதை வெல்பவர்(கள்) ஒரு ஆண்டுக்கான நிதியுதவியுடன் ($2,000-$10,000 USD) பிற செயல்திறன் மற்றும் வலையமைப்பு உருவாக்கல் ஆதரவையும் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களது யோசனைகளையும், திட்டங்களையும் அவர்களால் நிஜமாக்க இயலும்.
இளையோர் சவால் விருது என்பதையும் கடந்து தங்களது சமூகத்திலும் மற்றும் உலகளவிலும் மனநலத்தை உருமாற்றம் செய்வது குறித்து அர்ப்பணிப்பும், பேரார்வமும் கொண்டிருக்கின்ற இளம் நபர்களின் வளர்ந்து வரும் வலையமைப்பை சிட்டிஸ்ரைஸ் கொண்டிருக்கிறது. விண்ணப்பிக்கின்ற ஒவ்வொரு இளவயது நபரும் சென்னையில் நிறுவப்பட்டு வருகின்ற இளையோர் வலையமைப்பில் இணையுமாறும் மற்றும் ஆதரவளிக்குமாறும் வரவேற்கப்படுகிறார். அத்துடன் கொலம்பியா, கென்யா, யுனைட்டட் ஸ்டேட்ஸ் மற்றும் எதிர்காலத்தில் இன்னும் அதிக நாடுகளிலிருந்து பங்கேற்கின்ற நகரங்களிலுள்ள இளவயது நபர்களுடன் பிணைப்பினை ஏற்படுத்துகின்ற தேசிய அளவிலான மற்றும் உலக அளவிலான செயல் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் வரவேற்கப்படுகிறார்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இளவயது நபர்களை ஆதரித்து வருகின்ற தனிநபர்கள், இளையோர்களின் குழுக்கள் மற்றும் / அல்லது அமைப்புகள் இதற்கு விண்ணப்பிப்பதற்கு வரவேற்கப்படுகின்றனர். நீங்கள் ஒரு தனிநபராகவோ அல்லது முறையான அமைப்பு சாராத ஒரு குழுவாகவோ இருப்பீர்களானால் மற்றும் விருதுபெறுபவராக தேர்வு செய்யப்படுவீரானால், உங்களது செயல்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒரு அமைப்பை அடையாளம் காண உங்களோடு சேர்ந்து நாங்கள் செயலாற்றுவோம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான திறந்தநிலை காலஅளவின்போது எந்தவொரு மற்றும் அனைத்து கேள்விகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது குறித்த ஆதரவிற்கு தயவுசெய்து brindaa@cities-rise.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பிருந்தா லட்சுமியை தொடர்புகொள்ளவும்.
சென்னை இளையோருக்கான சவால் விருது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தல் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டல் மீதான முழு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்க்-கள் மீது தயவுசெய்து கிளிக் செய்யவும்
தமிழில் ஆவணங்களின் பதிப்பிற்கு:
Chennai YCA Submission Guide_2019-Rev – Tamil
எந்த வகையான யோசனைகள்/சிந்தனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்?
கீழ்வரும் அம்சங்களுள் ஒரு அல்லது அதற்கு கூடுதலானவை மீது உங்களது சமர்ப்பிப்பு கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்:
- மனநலம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அதை சுற்றியுள்ள சித்தரிப்பில் இருக்கும் அவப்பெயரை அகற்றுவது
- அனைவருக்கும் சிகிச்சை கவனிப்பு மற்றும் ஆதரவிற்கான அணுகுவசதியை அதிகரிப்பது;
- சமுதாய இணைப்பு நிலையை கட்டமைப்பது; மற்றும்
- மனநலத்தை மற்றும் நலவாழ்வை ஆதரிக்கின்ற சூழல்களை உருவாக்குவது.
சென்னையில் எமது பணியிலிருந்து பெற்ற படிப்பினைகள்:
சென்னையில் நடைபெற்ற இயற்கை நிலக்காட்சி (லேண்ட்ஸ்கேப்) மதிப்பீடு மற்றும் அக்கறை பங்காளர்களின் சந்திப்பு நிகழ்வுகளிலிருந்து பெற்ற பின்னறிவு தகவலின் அடிப்படையில் கீழ்வரும் முன்னுரிமைகள் மற்றும் ஆர்வத்திற்குரிய பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம்:
- முடிவு மேற்கொள்ளும் செய்முறை மற்றும் தலைமைத்துவ பொறுப்பில் இளம் நபர்கள் ஈடுபடுத்தப்படுவது அவசியமாகும் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படுகின்ற மற்றும் குறிப்பாக, வாழ்ந்த அனுபவம் உள்ள இளம் நபர்களுக்கு, சிறப்பாக செயலாற்றுகின்ற விருப்பத்தேர்வுகள் மீது முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கவேண்டும்.
- மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மற்றும் அவைகளை சமாளிக்க மருத்துவ அணுகுமுறையிலிருந்து விலகிச்சென்று, சுகாதார பராமரிப்பிற்கு வெளியே உள்ள பல்வேறு தீர்வுகளை ஆய்வு செய்வதற்கான அவசியம் இருக்கிறது. ஏனெனில், சாதி, நிறம், பாலினம், பாலியல் உணர்வு, திறனிழப்பு ஆகியவற்றோடு அதன் இணைப்பு நிலையின் தாக்கம் இல்லாமல் மற்றும் கல்வி, கலைகள், நகர்ப்புற வடிவமைப்பு, ஊடகம் போன்ற பிற துறைகளின் பாதிப்பு இல்லாமல் மனநலத்தை மட்டும் தனித்து ஒதுக்கி பார்க்கின்ற ஆபத்தை இது எதிர்கொள்கின்றது.
- தனிநபர்களின் மாறுபட்ட, பல்வேறு விதமான அடையாளங்களையும் மற்றும் பிற குழுக்களோடு தலித் குழுக்கள், LGBTIQA+ சமூகத்தினர், திறனிழப்புள்ள நபர்கள் போன்றவற்றின் குறுக்கு சந்திப்பு நிலைகளை கருத்தில்கொண்டு மனநல பிரச்சனையை அணுகுவதற்கான தேவை இருக்கிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
படிநிலை 1 – அறிவிப்பை பரிசீலிப்பது: இந்த ஆவணம் முழுவதையும் கவனமாக வாசித்து, பரிசீலனை செய்யவும்.
படிநிலை 2 – அடிப்படை தகவலைப் பூர்த்தி செய்வது: விண்ணப்பத்திற்கான வழிகாட்டலின் ஒரு பகுதியாக உள்ள முகப்புத்தாளை பூர்த்தி செய்யவும்.
படிநிலை 3 – உங்கள் விண்ணப்பத்தை எழுதுவது: கீழே கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்குகிற ஒரு விவரணையை எழுதவும். தயவுசெய்து 11 அல்லது அதற்கு அதிகமான -பாய்ண்ட் எழுத்துருவை (ஃபாண்ட்) பயன்படுத்தவும் மற்றும் உங்கள் ஆவணத்தில் ஒற்றை இடைவெளியை விடவும்.
உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு கீழ்வரும் வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்:
பிரிவு 1. நீங்கள் யார்? (அதிகபட்சமாக ஒரு பக்கம்)
பிரிவு 1-க்கு ஒரு தனிநபராகவோ / குழுவாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ பதிலளிக்கவும்.
தனிநபர் / குழு வரலாறு – (ஒரு அமைப்பு உங்களுக்கு இல்லையென்றால் அல்லது ஆதரவளிக்கும் அமைப்பு எதுவும் இல்லாமல் நீங்கள் விண்ணப்பிப்பீர்களானால்):
- தனிநபரின் பெயர், பாலினம் மற்றும் வயது
- பின்புலம் (கல்வி / பணி அனுபவம் / வாழ்ந்த அனுபவம்)
- உங்களது யோசனை / திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?
- தற்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று விவரிக்கவும் (படிப்பு, பணியாற்றல் போன்றவை)
- பெற்ற ஏதேனும் விருதுகள், வெற்றிகள், தொடர்புடைய தாக்க புள்ளியியல் விவரங்கள் மீது தகவலளிக்கவும்
அல்லது
அமைப்பின் வரலாறு – (இங்கு உங்களது அமைப்பு / நிறுவனம் குறித்து தகவலை வழங்கவும்)
- நிறுவனத்தின் குறிக்கோள் / செயல்திட்ட அறிக்கை
- செயல்திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் பின்புலம்
- உங்களது யோசனை / திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?
- உங்களது அமைப்பின் நடப்பு செயல்திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரிக்கவும்
- பெற்ற ஏதேனும் விருதுகள், வெற்றிகள், தொடர்புடைய தாக்க புள்ளியியல் விவரங்கள் மீது தகவலளிக்கவும்
பிரிவு 2. உங்களது செயல்திட்டம் / யோசனை என்ன? (அதிகபட்சமாக 2 பக்கங்கள்)
- உத்தேசிக்கப்படும் செயல்திட்டத்தை, அதன் நிலை உட்பட (யோசனை, கருத்தாக்கம் அல்லது செயலாக்கத்திற்கான சான்று) விவரிக்கவும்.
- உத்தேசிக்கப்படும் செயல்திட்ட தீர்வுகாண முற்படும் குறிப்பிட்ட பிரச்சனை என்ன மற்றும் கூர்நோக்க பகுதிகள் (பக்கம் 2-ல் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள), செயல்திட்ட / யோசனையின் இலக்குகள்?
- இலக்கு அமைவிடம் (எ.கா. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முறைசாரா குடியிருப்பு பகுதிகள்) மற்றும் இலக்கு மக்கள் குழு (எ.கா. குறிப்பிட்ட விளிம்புநிலை சமூகங்கள், மாணவர்கள்) மற்றும் இச்செயல்திட்டம் அவர்களுக்கு எப்படி பயனளிக்கும் என்று விவரிக்கவும்.
- இச்செயல்திட்டத்திற்காக நீங்கள் திட்டமிட்டிருக்கின்ற மிக முக்கிய செயல்பாடுகள் யாவை?
- இச்செயல் திட்டத்திற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால விளைபயன்கள் யாவை மற்றும் எந்த நிலையில் (தனிநபர் அல்லது சமூகம்) அவைகள் இருக்கும்?
- நீங்கள் கோருகின்ற விருது பணத்தொகையின் அளவு என்ன மற்றும் இச்செயல்திட்டத்திற்கு ஆதரவளிக்க அது எப்படி பயன்படுத்தப்படும்?
பிரிவு 3. இச்செயல்திட்டம் வெற்றிகரமாக இருக்கும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? (அதிகபட்சமாக 1 பக்கம்)
- உங்களது அணுகுமுறை ஏன் யதார்த்தமானது / நடைமுறை சாத்தியமுள்ளது என்று விவரிக்கவும்.
- இச்செயல்திட்டத்திற்கு இதுதான் சரியான நேரம் என்று ஏன் கருதுகிறீர்கள் (எ.கா. தொடர்புடைய கொள்கை ,கட்டமைப்பு வசதி)?
- இச்செயல்திட்டம் பலன் அளிப்பதாக இருக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட காலஅளவிற்குள் செயல்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புமாறு செய்வது என்ன?
- உங்களது செயல்திட்டத்தில் குறுக்குசந்திப்பு தன்மையை (இன்டர்செக்ஷனாலிட்டி) எவ்வாறு நீங்கள் இணைத்திருக்கிறீர்கள்?
பிரிவு 4
- நீங்கள் எதிர்பார்க்கின்ற மிக முக்கிய ஆதரவு என்ன? (இந்த கேள்விக்கான பதில் மதிப்பீடு செய்யப்படாது. விண்ணப்பதாரர் அதிகமாக பலன்பெற ஆதரவளிக்கும் செய்திறன் உருவாக்கல் ஆதரவின் வகையை / தன்மையை நாங்கள் புரிந்துகொள்ளவும் மற்றும் அதற்கேற்ப கூட்டுவகிப்பு நடவடிக்கைகளை வடிவமைக்கவும் புரிந்துகொள்ளுமாறு இது எங்களுக்கு உதவும்)
படிநிலை 4 – விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது: காலக்கெடுவிற்கு முன்னதாக அதாவது, 2019 நவம்பர் 24 ஆம் தேதி இரவு 11:59 க்குள் உங்கள் விண்ணப்பத்தை மின்னஞ்சல் வழியாக – YCAsubmissions@cities-rise.org என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கவும். உங்களது மின்னஞ்சலில் பொருளுக்கான இடத்தில் “சென்னை YCA” என்று குறிப்பிடுவதை உறுதி செய்யவும்.
சென்னை இளையோருக்கான சவால் விருது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தல் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டல் மீதான முழு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்க்-கள் மீது தயவுசெய்து கிளிக் செய்யவும்.
தமிழில் ஆவணங்களின் பதிப்பிற்கு:
சமர்ப்பிப்புக்கான காலக்கெடு: நவம்பர் 24, 2019 – இரவு 11:59 IST
வாழ்த்துக்கள்! உங்களது சமர்ப்பிப்பை பெற நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்!